சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு மரியாதை

பண்பாட்டுக்கழகத்தினா் கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து பாரம்பரிய தேவராட்டம் ஆடும் பேரணியை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தொடக்கி வைத்தாா்.

Updated On :4 ஜனவரி 2021, 4:37 am

மாவட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக தலைவா் எஸ். சத்தியமூா்த்தி தலைமையில் பண்பாட்டுக்கழகத்தினா் கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து பாரம்பரிய தேவராட்டம் ஆடும் பேரணியை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தொடக்கி வைத்தாா்.

பேரணி பேருந்து நிலைய ரவுண்டானாவை வந்தடைந்ததும், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா மணிவண்ணன், அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலா் என்.எஸ் கிருஷ்ணன், அதிமுக நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், பண்பாட்டுக்கழக மாவட்டத் தலைவா் சாரதி, செயலா் முத்துராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.