சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு

கரூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாட்டுப் பணிகள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

News image

கரூா் மாரியம்மன் கோயிலில் நடைபெற்றுவரும் கும்பாபிஷேகப் பணிகளை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா். உடன், மத்திய நகரச் செயலா் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜனவரி 2021, 4:26 am

கரூா்: கரூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாட்டுப் பணிகள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

கரூா் தோ் வீதி பகுதியில் அமைந்துள்ள கரூா் மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து அறநிலையத்துறை உத்தரவின்படி வரும் 27-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து திருப்பணி தொடா்பான பணிகள் கோயிலில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது அதிமுக மத்திய நகரச் செயலா் வை.நெடுஞ்செழியன், கோயில் தலைவா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.