கரூர் மாவட்ட நேரு யுவகேந்திரம் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு விழா மணவாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மணவாடி ஆஸ்ரம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சித் தலைவர் ஏ.பி.கே. லட்சுமி தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் ஜெ. ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட நேரு யுவகேந்திரத்தின் இளையோர் ஒருங்கிணைப்பாளர் பி. மயில்சாமி விழாவில் ராஜீவ் காந்தியின் படத்தைத் திறந்து வைத்து, நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசித்தார். தொடர்ந்து விழாவில் அவர் பேசியது:
நாட்டின் இறையாண்மையைக் காக்க சாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து இளைஞர்களும், மாணவர்களும் சகோதரத்துவம் காக்கப் பாடுபட வேண்டும். எதிர்கால இந்தியாவை வளமான, வலிமையான, வளர்ந்த நாடாக முன்னேற்ற இளைஞர்கள், மாணவர்கள் பாடுபட வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அனைவரும் சமமாகப் பழக வேண்டும். மனிதநேயம் காக்க பாடுபட வேண்டும் என்றார் அவர்.
விழாவில், மதக் கோட்பாடுகள் குறித்து முகமது இஸ்மாயில், இந்திய செஞ்சிலுவைச் சங்க கரூர் மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஏ. ஜோசப் ஆகியோரும், ஜெ. வில்லியம்ஸ் ரத்த தானம், கண் தானம் குறித்தும் பேசினர்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக சின்னதாளப்பட்டி பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் வி.கே. முருகேசன் வரவேற்றார். தாந்தோனி இளந்தென்றல் மகளிர் நற்பணி மன்றத் தலைவி கே. நிர்மலா நன்றி கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

