சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பசுபதிபாளையம்- அமராவதி ஆறு இணைப்பு பாலப் பணியை தொடங்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கரூர் பசுபதிபாளையம்- அமராவதி ஆறு இணைப்புப் பாலப் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:21 pm

கரூர் பசுபதிபாளையம்- அமராவதி ஆறு இணைப்புப் பாலப் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிக்குப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடகனாறு வாய்க்காலை தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவும், வெள்ளியணை குளத்தின் கரையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூரிலிருந்து திண்டுக்கல் வரை காலை, மாலை நேரங்களில் பயணிகள் ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். புலியூர் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு சில வாரங்களிலேயே மூடப்பட்டுவிட்டது. எனவே மக்கள் நலன்கருதி இந்த புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பேங்க் கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகரத் தலைவர்கள் சுப்பன், எஸ்.சி. அங்கமுத்து, வட்டாரத் தலைவர்கள் கே. வெள்ளக்கண்ணு, பி. கோபால், தமிழ்மணி, பி. கண்ணன் ஆகியோர் பேசினர்.

மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர்கள் மனோகரன், நாகராஜன், கரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ். ஜெகதீóஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.