சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இடம்பெயர்ந்து வாழ்வோருக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கான 4-வது தவணை சிறப்பு தடுப்பூசி முகாம் கரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22)

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:22 pm

இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கான 4-வது தவணை சிறப்பு தடுப்பூசி முகாம் கரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) தொடங்குகிறது.

இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரூர் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 22 முதல் 24-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

இந்த முகாமில் குடிசைவாழ் மக்கள், நாடோடிகள், செங்கல் சூளைகள், கட்டுமானப் பணிகளில் வேலை செய்பவர்கள், தொலைவு மற்றும் எளிதில் சென்றுஅடைய முடியாத பகுதிகளில் வாழ்பவர்கள், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ள துணை சுகாதார நிலையப் பகுதிகள், குறைவான தடுப்பூசி சாதனை அளவு உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

எனவே 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் விடுபட்டிருந்தாலும், கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் போட வேண்டிய இரண ஜன்னி தடுப்பூசி போடாமல் விடுபட்டிருந்தாலும் அந்தந்த பகுதிகளில் துணை சுகாதார நிலையங்களில் 3 நாள்கள் நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.