சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

"அம்மா' திட்ட முகாம் நாளை நடைபெறும் இடங்கள்

கரூர் மாவட்டத்தில் "அம்மா' திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியர் ச. ஜெயந்தி புதன்கிழமை தெரிவித்திருப்பது:

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:24 pm

கரூர் மாவட்டத்தில் "அம்மா' திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியர் ச. ஜெயந்தி புதன்கிழமை தெரிவித்திருப்பது:

மக்களைத் தேடி வருவாய்த் துறையினர் செல்லும் "அம்மா' திட்ட முகாம் கரூர் மாவட்டத்திலுள்ள 5 வட்டங்களிலும் ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காணப்படும். தகுதியுடைய நபர்களுக்கு உடனடியாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும்.

கரூர் வட்டத்தில் ஏமூர், பள்ளப்பாளையம் ஊராட்சி அலுவலகங்கள், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் கிருஷ்ணராயபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன், குளித்தலை வட்டத்தில் வைகைநல்லூர் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன், கடவூர் வட்டத்தில் காணியாளம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், அரவக்குறிச்சி வட்டத்தில் ராஜபுரம் ஊராட்சி அலுவலகம், வைரமடை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் "அம்மா' திட்ட முகாம் நடைபெறுகிறது.