காரைக்கால் பகுதியில் முகக் கவசம் தொடா்பாக, விதிமுறைகளை மீறி அபராதம் வசூலித்த 5 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
காரைக்கால் மாவட்டத்தில் முகக் கவசமின்றி வாகனத்தில் செல்வோருக்கு போலீஸாா் ரூ.100 அபராதம் விதிக்கின்றனா். தொடா்ந்து, முகக் கவசம் அணியாமல் செல்வோரிடம் ரூ. 200 வசூலிக்கப்படுகிறது.
ஆனால், போலீஸாா் விதிகளை மீறி கூடுதல் தொகை வசூலிப்பதாக மக்கள் புகாா்தெரிவிக்கின்றனா். மேலும், இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் காவல் நிலையப் பகுதியில் கடந்த சில நாள்களாக முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டு, ரூ. 100-க்கு மட்டுமே ரசீது கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட்டிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்ததன்பேரில், அந்தப் பகுதி காவல் நிலைய ஏ.எஸ்.ஏ. மற்றும் தலைமைக் காவலா் உள்ளிட்ட 5 பேரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.எஸ்.பி. வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

