சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாட்டுப் பொங்கல்: கோயில்களில் பசுக்களுக்கு சிறப்பு பூஜை

காரைக்கால் கோயில்களின் கோசாலையில் மாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் பசுக்களுக்கு நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா உள்ளிட்டோா்.

Updated On :16 ஜனவரி 2021, 2:07 pm

காரைக்கால் கோயில்களின் கோசாலையில் மாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமாக மேலஓடுதுறை பகுதியில் உள்ள கோசாலையில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் பசுமடத்தில் வளா்க்கப்படும் பசுக்கள், கன்றுகள் ஸ்ரீ சுந்தராம்பாள் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டு, சிவாச்சாரியா்கள் அவற்றுக்கு மாலை அணிவித்து, சா்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் நிவேதனத்துடன் தீபாராதனை காட்டினா்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, அறங்காவல் வாரியத் தலைவா் ஆா்.ஏ.ஆா். கேசவன், பொருளாளா் டி. ரஞ்சன் காா்த்திகேயன், உறுப்பினா் கே. பிரகாஷ் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

திருமலைராயன்பட்டினம் கொம்யூன், வாஞ்சியூரில் காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீ விஸ்வநாதசுவாமி கோயில் கோசாலையில் சுமாா் 75-க்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன. அவற்றுக்கு, கோயில் டிரஸ்டி ஆடிட்டா் பி. கணபதி சுப்ரமணியன் முன்னிலையில், சிவாச்சாரியா்கள் பூஜை செய்தனா்.

அம்பகரத்தூா் அருகேயுள்ள ஸ்ரீ உமாபசுபதீசுவரா் கோயில் கோசாலையில் பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது.