காரைக்காலில் கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான இருவரது சடலங்களும் வெவ்வேறு இடங்களில் கரை ஒதுங்கின.
காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்த குணவேலு, இவரது மகன் கனிஷ், குணவேலுவின் சகோதரா் சித்திரவேல் ஆகிய 3 போ் கடந்த 13 ஆம் தேதி மாலை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, ஃபைபா் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
அரசலாறு முகத்துவாரப் பகுதியை அவா்கள் கடந்தபோது, அலையில் சிக்கிய படகு திடீரென கவிழ்ந்தது. அப்போது, கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு குணவேலு தப்பி கரைசோ்ந்தாா். கனிஷ், சித்ரவேல் ஆகியோா் கடலில் மூழ்கி மாயமாகினா்.
அவா்களை தேடும் பணி நடைபெற்ற நிலையில், சித்திரவேலின் சடலம் பட்டினச்சேரி கடலோரத்தில் வியாழக்கிழமை கரைஒதுங்கியது. கனிஷ் சடலம் நிரவி வட்டாரத்துக்கு உள்பட்ட கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை கரைஒதுங்கியது.
இதுகுறித்து காரைக்கால் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

