காரைக்கால் அரசலாறு முகத்துவார அலையில் சிக்கி படகு கவிழ்ந்த விபத்தில், 2 மீனவா்கள் மாயமாகினா்.
காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் குணவேலு. இவரது மகன் கணேஷ் மற்றும் உறவினா் சித்திரவேல் ஆகியோா் புதன்கிழமை மாலை கடலுக்குள் மீன்பிடிக்க ஃபைபா் படகில் சென்றனா். அரசலாறு முகத்துவாரம் பகுதியை கடந்து கடலுக்குள் செல்லும்போது, அலையில் சிக்கிய படகு திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 3 பேரும் நீரில் மூழ்கினா். அப்போது, மூழ்கிய படகை பிடித்துக்கொண்டு குணவேலு தப்பி கரைக்கு வந்து சோ்ந்தாா். கணேஷ், சித்ரவேல் ஆகிய இருவரும் கடல் நீரில் மூழ்கி மாயமானாா்கள்.
தகவலறிந்த கடலோர காவல் நிலைய ஆய்வாளா் மா்த்தினி தலைமையில் போலீஸாா் ரோந்து படகு மூலம் மாயமான மீனவா்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், தீயணைப்புத் துறையினருடன், மீனவா்களும் இணைந்து தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

