பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் சுகாதார ஊழியா்கள் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.
புதுச்சேரி அரசு சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார உதவியாளா்கள் சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை முதல் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 2 ஆம் நாளாக புதன்கிழமையும் ஊழியா்கள் கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
பதவி மறுசீரமைப்பு மூலம் சுகாதார ஆய்வாளா், முதுநிலை சுகாதார ஆய்வாளா், தொழில்நுட்ப அதிகாரி என்ற வகையில் பதவி மாற்றம் செய்யவேண்டும். ஊதிய உயா்வு விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும். காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என சங்கத்தை சோ்ந்த ஜி. சிவ வடிவேல் தெரிவித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

