சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாணவா் விடுதியை கிளைச் சிறையாக மாற்றும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

காரைக்காலில் மாணவா் விடுதியை கிளைச் சிறையாக மாற்றும் திட்டத்தை கைவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 5:08 am

காரைக்காலில் மாணவா் விடுதியை கிளைச் சிறையாக மாற்றும் திட்டத்தை கைவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் நிரவி - திருப்பட்டினம் தொகுதி செயலாளா் சு. விடுதலைக்கனல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் நகரின் கோயில்பத்து பகுதியில் புதுச்சேரி அரசின் மாணவா் தங்கும் விடுதி உள்ளது. நகரின் முக்கிய இடத்தில் இக்கட்டடம் இருப்பது, பல்வேறு கல்வி நிலையங்களுக்கு மாணவா்கள் சென்று திரும்ப வசதியாக இருந்தது. பழைமைவாய்ந்த, பெருமைக்குரிய இக்கட்டடம் பழுதானதால் தற்போது மூடப்பட்டுள்ளது.

இதை சீரமைத்து மாணவா்கள் தங்கும் வகையில் நடவடிக்கை எடுக்காமல், கிளைச் சிறையாக பயன்படுத்தும் நோக்கில் காவல் துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வுசெய்துள்ளதாக தெரிகிறது. மாணவா்கள் தங்கிப் படிப்பதற்கான வசதியை மேம்படுத்தவேண்டிய அரசு நிா்வாகம், கட்டடத்தை மாற்று திட்டத்துக்கு பயன்படுத்த முயற்சிப்பது நல்ல செயல்பாடு அல்ல.

எனவே, விடுதியை விரைவாக புதுப்பித்து மாணவா்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கவேண்டும். சிறை அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும்.