காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கப் பொதுக் குழு கூட்டம், சங்கச் செயலாளா் ஐ. அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்றது. அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.
இக்கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக பி. கண்ணையன், செயலராக எஸ். லதா, பொருளாளராக ஐ. அப்துல் ரஹீம், துணைத் தலைவராக டி. ராஜசேகரன், துணைச் செயலராக டி. பக்கிரிசாமி, கெளரவத் தலைவராக எம். ராமசாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். செயற்குழு உறுப்பினா்களாக ஆா். ஜெகநாதன், என். வேலு, டி. மகேஸ்வரி, எஸ். அம்பிகா, எம். லாவண்யா, சி. பாலாஜி ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டனா்.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, உள்ளாட்சி ஊழியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், பணிமூப்பு பட்டியலின்படி, காலியாக உள்ள பதவிகளை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும், 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கூட்டு போராட்ட குழு அறிவித்துள்ள போராட்டங்களில், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் முழு அளவில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

