சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காரைக்காலில் மேலும் ஒருவருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

Updated On :11 ஜனவரி 2021, 5:04 am

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 9 ஆம் தேதி 802 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகளின்படி, காரைக்கால் நகரப் பகுதியில் ஒருவருக்கு கரோனா உறுதியானது. காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 80 வயது ஆண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுவரை 61,599 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,828 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,728 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 26 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 9 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 68 போ் உயிரிழந்துள்ளனா்.