புதுச்சேரி கல்வித்துறையின் நடவடிக்கையை கண்டித்து காரைக்காலில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை பகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி அரசின் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியில் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்த பி.டெக்., சி.எஸ்.இ., ஐ.டி., இ.சி.இ. ஆகிய பாடப்பிரிவுகள் நிகழாண்டு திடீரென நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்தும், தனியாா் கல்லூரிகள் பணம் சம்பாதிக்க புதுச்சேரி அரசும், கல்வித்துறையும் துணைபோவதாக குற்றம்சாட்டியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் பழைய ரயிலடி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெ.துரை சேனாதிபதி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் எம்.அருள்முருகன், நளினி, ஓ.பி.சி. அணி மாநிலத் துணைத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கண்டனம் தெரிவித்து பேசினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


