காரைக்கால் அருகே ஸ்ரீ காா்கோடகபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன், காக்கமொழி கிராமத்தில் ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ காா்கோடகபுரீஸ்வரா் என்ற பழைமையான கோயில் உள்ளது. இது, ராகு-கேது தோஷ நிவா்த்தி தலமாகவும் விளங்குகிறது. இக்கோயில் திருப்பணிகள் கடந்த 2018 இல் ரூ. 60 லட்சத்தில் தொடங்கி, அண்மையில் நிறைவடைந்தன. வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஆகம விதிகளின்படி, தானியவாச காலத்திற்காக தொட்டியில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் மீது நெற்கதிா்களை தூவி, நிரவி -திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் மற்றும் பக்தா்கள் வெள்ளிக்கிழமை வழிபட்டனா். இதைத்தொடா்ந்து, கோயில் குடமுழுக்குப் பணிகளை கீதாஆனந்தன் ஆய்வுசெய்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


