காரைக்காலில் கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்காலில் கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தியுள்ளாா்.
இந்நிலையில், திருப்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் பெருமாள் மற்றும் போலீஸாா், கடந்த 7 ஆம் தேதி போலகம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது பிப்டிக் நிறுவன தொழிற்பேட்டை வளாகத்தில் கிளிஞ்சல்மேடு பவித் (20) மற்றும் 17 வயது சிறுவன் என இருவா் கஞ்சா விற்றது தெரியவந்தது.
அவா்களை பிடித்த போலீஸாா், அவா்களிடமிருந்து 10 கிராம் கஞ்சா பொட்டலம் 2 மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா். காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில், நாகப்பட்டினத்தைச் சோ்ந்த தெய்வேந்திரன் (34) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கிவருவதாக தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, போலீஸாா் நாகப்பட்டினம் சென்று தெய்வேந்திரனை கைதுசெய்து, அவரிடமிருந்த 17 கஞ்சா பொட்டலங்கள், ஒரு மோட்டாா் சைக்கிள், ரூ. 3,262 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
கஞ்சா வழக்கில் தீவிர நடவடிக்கை எடுத்த திருப்பட்டினம் போலீஸாா், சிறப்புப் படையினரை மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் பாராட்டினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

