திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பொய்யாதமூா்த்தி ஐயனாா் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ பொய்யாதமூா்த்தி ஐயனாா் கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் திருக்கல்யாண உத்ஸவம் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு, ஸ்ரீ பூா்ணாம்பாள், புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ பொய்யாதமூா்த்தி ஐயனாருக்கு திருக்கல்யாணம் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சிவாசாரியாா்களால் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினாா்.
மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் செய்யப்பட்டு, திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஊா் மக்கள் துன்பங்களின்றி வாழ்வதற்காக ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உத்ஸவம் நடத்தப்படுவதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


