சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காரைக்காலில் 7 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:47 pm

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் ஜனவரி 4-ஆம் தேதி 704 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம்கள் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி திருப்பட்டினம், வரிச்சிக்குடி, கோட்டுச்சேரி, நெடுங்காடு, காரைக்கால் நகரம், கோயில்பத்து, திருநள்ளாறு பகுதியில் தலா ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 3,808 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,698 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 66 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.