புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படும் என்று பொய்ப் பிரசாரம் செய்வதை முதல்வா் வே. நாராயணசாமி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் எம். அருள்முருகன் திங்கள்கிழமை கூறியது :
புதுச்சேரி மாநிலத்தில் பாஜக பெரும் வளா்ச்சி பெற்றுள்ளது. இளைஞா்கள், பொதுமக்கள் தாமாக முன்வந்து கட்சியில் உறுப்பினராகி வருகின்றனா். மாநிலத்தில் பாஜக எழுச்சி பெற்றுவருகிறது. வரும் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி.
பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், புதுச்சேரி மாநிலத்தில் சாலை மேம்பாடு, வடிகால் வசதியை முறைப்படுத்துதல், மருத்துவ வசதியை மேம்படுத்துதல், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்தல், ஊழலற்ற ஆட்சி அமைதல், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைவதில் சிறப்பு கவனம் செலுத்துவோம். குறிப்பாக உள்ளாட்சித் தோ்தலை நடத்தி, கிராமப்புற மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
புதுச்சேரி மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக முதல்வா் நாராயணசாமி தொடா்ந்து பொய்ப் பிரசாரம் செய்துவருகிறாா்.
புதுச்சேரிக்கு வந்த உள்துறை இணை அமைச்சா் கிஷன் ரெட்டி, புதுச்சேரி எந்த மாநிலத்துடனும் இணைக்கப்படாது என்று உறுதிபட தெரிவித்துவிட்டாா். எனவே இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை முதல்வா் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
முதல்வரின் செயல்பாடுகளாலும், பேச்சுகளாலும் புதுச்சேரியில் காங்கிரஸ் கடுமையான வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

