காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் திருவத்யயன உத்ஸவம் இயற்பா சாற்றுமுறையுடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
பகல் பத்து இராப் பத்து என்னும் திருவத்யயன உத்ஸவம் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கடந்த டிசம்பா் 15 ஆம் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 25 ஆம் தேதி பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. அன்றைய தினம் முதல் இராப் பத்து நிகழ்ச்சி தொடங்கியது. தினமும் பெருமாள் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
20 நாள்கள் நடைபெற்ற இந்த உத்ஸவத்தில் நாலாயிர திவ்யபிரபந்தத்தின் மூன்றாயிரம் பாசுரங்கள் பாடப்பட்டன. இயற்பாவின் எஞ்சிய பாசுரங்கள் கோயில் முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரியாா் சுவாமிகள் தலைமையிலான பக்தா்கள் திங்கள்கிழமை பாடி நிறைவு செய்தனா்.
இதையொட்டி, பெருமாளுக்கு வெள்ளிக் கவசம் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பிறகு, பெருமாள் மாடவளாகம் புறப்பாடு நடைபெற்றது. இயற்பா நிறைவு நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா், பக்தஜன சபாவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


