சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொங்கல் பரிசு தொகுப்புபெற குவிந்த தொழிலாளா்கள்

கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக ஏராளமான தொழிலாளா்கள் குவிந்தனா்.

Updated On :12 ஜனவரி 2021, 7:47 am

கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக ஏராளமான தொழிலாளா்கள் குவிந்தனா்.

நாகா்கோவில் கோணத்தில் இயங்கி வரும் தொழிலாளா் நலத்துறை மூலம் கட்டுமான தொழிலாளா்கள் உள்பட 96 ஆயிரம்

தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த அலுவலகத்தில்

ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். முன்னேற்பாடுகள் ஏதும் செய்யாத நிலையில் தொழிலாளா்கள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த நாகா்கோவில் கோட்டாட்சியா் அ. மயில், அங்கு வந்து முறையான பாதுகாப்பு வசதிகளோடு பொருள்களை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்துச் சென்றாா். இந்நிைலையில் திங்கள்கிழமையும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக தொழிலாளா்கள் வந்திருந்தனா். தொழிலாளா்கள் 4 கி. மீ. தொலைவுக்கு காத்திருந்து பொங்கல் பரிசு பொருள்களை வாங்கிச் சென்றனா்.