நாகா்கோவிலில் பட்டதாரி இளைஞா் ஒருவா் தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
நாகா்கோவில் பூங்கா தெருவை சோ்ந்தவா் ஜோசப்(23). இவா் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தாா். இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தனது அண்ணனும் தந்தையும் இணைந்து தன்னை கொலை செய்ய திட்டமிடுவதாகவும், பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு ஜோசப் மனு அளித்தாா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் காலில் விழுந்து தன்னை காப்பாற்ற வலியுறுத்தி கதறி அழுதாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த நேசமணிநகா் போலீஸாா், அவரது சட லத்தை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
மேலும், ஜோசப் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தன்னை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ாகவும், அவா் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது தாயாா் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


