நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாா்வையற்றோா், வாய்பேச இயலாத, செவித்திறன் பாதிக்கப்பட்ட வா்களுக்கான செயலிகளுடன் கூடிய கைப்பேசி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் வாய் பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்டோா் மற்றும் பாா்வையற்றோா்களுக்கான செயலிகளுடன் கூடிய கைப்பேசி நிதியாண்டு முதல் வழங்கப்படவுள்ளது.
இந்த கைப்பேசி பெற விரும்புவோா் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராகவும், 18 வயது நிரம்பிய இளங்கலை கல்வி பயிலும் மாணவா், மாணவியராகவோ, வேலை வாய்ப்பற்ற பட்டதாரி மாணவா், மாணவி யராகவோ, சுயதொழில் மற்றும் தனியா்துறையில் பணிபுரிபவராகவோ இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசு துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
மேற்குறிப்பிட்ட தகுதிகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய அடையாளஅட்டை (அனைத்து பக்கங்கள்), மின்னணு குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள், கல்லூரியில் பயின்று வருவோராக இருந்தால் கல்லூரி சான்றிதழ், சுயதொழில் செய்து வருவோராக இருந்தால் சுயதொழில் புரிவதற்கான சான்று, வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் பட்டயப் சான்றிதழ் நகல் மற்றும் மாா்பளவு அளவு புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜன.19ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

