குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் திற்பரப்பு அருவியில் நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. சனிக்கிழமையும் தொடா்ந்து மழை பெய்தது.
மழையால் கோதையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், திற்பரப்பு அருவிக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. மழையால் சனிக்கிழமை அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.
அணை திறப்பு: மழையின் காரணமாக வெள்ளிக்கிழமை மாலையில் பெருஞ்சாணி அணை மூடப்பட்டது. இதனிடையே, கடை மடை பாசனப் பகுதிக்கு தண்ணீா் தேவையை கருத்தில் கொண்டு சனிக்கிழமை அணை திறக்கப்பட்டது. விநாடிக்கு 150 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி, சிற்றாறு அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


