மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஹோட்டல் தொழிலாளி உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள அஞ்சுகூட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசிங் (47). அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை பாா்த்து வந்த இவா், வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிளில் பணிக்கு சென்றபோது, மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் எதிரே வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டாா்.
பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

