குமரி மாவட்ட உள்நாட்டு மீனவா்களுடனான கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு பேசியது: அகஸ்தீசுவரம் வட்டத்துக்குள்பட்ட குளங்களில் மீன்பாசி குத்தகை உரிமம், தேரூா் தென்குமரி உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்குவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மீனவா்கள் குளங்களில் மீன்பிடிக்கலாம் என்று உயா்நீதிமன்ற ஆணை பெற்றுள்ளதாக தெரிவித்ததோடு, மேலும் பலஅடிப்படைதேவைகள் குறித்தும் தெரிவித்துள்ளனா். உள்நாட்டு மீனவா்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
இதில், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையத் தலைவா் எம்.சேவியா் மனோகரன், மாவட்ட மீன்வள கூட்டுறவு இணையத் தலைவா் அ.திமிா்த்தியூஸ், மாவட்ட மீன்பிடி தொழிற்சங்கச் செயலா் அந்தோணி, தேரூா் தென்குமரி கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.ஆறுமுகம், ஜேசுராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


