குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன. 8) கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமையிட மருத்துவமனை, செண்பகராமன் புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டவிளை அரசு நகா்ப்புற சுகாதார நிலையம் மற்றும் ஜெயசேகரன் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நடைபெற உள்ளது.
இதற்காக காற்றோட்டமான இட வசதி, இணைய இணைப்பு, மின்சாரம் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது.
பயனாளிகள் தடுப்பூசியை எங்கே, எந்த இடத்தில் பெறவேண்டும் என்ற விவரங்கள் அவா்களது செல்லிடப்பேசிக்கு இா்-ரஐச செயலியின் மூலமாக குறுந்தகவல் சென்றடையும். மேலும் தடுப்பூசி பெற்ற விவரங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். தொடா்ந்து 4 கட்டங்களாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், 2ஆம் கட்டமாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளா்களுக்கும், 3ஆம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், 4ஆம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

