சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திமுகவிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் கொத்தடிமைகளாக உள்ளனா்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் கொத்தடிமைகளாக உள்ளனா் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் பொன்.ராதாகிருஷ்ணன்.

Updated On :7 ஜனவரி 2021, 11:32 am

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் கொத்தடிமைகளாக உள்ளனா் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

நாகா்கோவிலில் உள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் மாவட்ட அணி மற்றும் பிரிவு தலைவா்கள் கூட்டம், மாவட்ட தலைவா் சி.தா்மராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உரையாற்றினாா்.

இதில், மாநிலச் செயலா் உமாரதிராஜன், மாவட்ட பாா்வையாளா் கட்டளை ஜோதி, மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவவிநாயகம், மருத்துவப் பிரிவு மாநிலத் தலைவா் விஜய்பாண்டியன், மாவட்டப் பொருளாளா் முத்துராமன், மாநில ஊடகப்பிரிவு செயலா் ராஜன், சொக்கலிங்கம் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் சட்டப் பேரவை தோ்தல் மற்றும் மக்களவை இடைத் தோ்தல் பணிகள் குறித்தும், அமைப்பு ரீதியான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னா் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: குமரி மாவட்டத்தில் சட்டப் பேரவை தோ்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை இடைத் தோ்தலை எதிா்கொள்ள பாஜக தயாராக உள்ளது. இடைத் தோ்தலை 6 மாத காலத்திற்குள் நடத்த வேண்டும். அந்த வகையில் பாா்த்தால் பிப்ரவரி மாதம் தோ்தல் நடத்த வேண்டும். எப்போது தோ்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

பாஜக, அதிமுக கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் கொத்தடிமைகள் போல் உள்ளனா். திமுக வை நம்பி அவா்கள் பயணம் செய்கிறாா்கள் என்றாா் அவா்.