மாா்த்தாண்டம் அருகே மனைவி கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள சரக்கல்விளை பகுதியைச் சோ்ந்தவா் ஷைபின் (32). வெளிநாட்டில் வேலைசெய்து வந்தாா்.
பின்னா், மும்பையில் வேலைசெய்து வந்தாராம். அப்போது, மகராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த அலினாவுடன் (24) முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனராம்.
இதையடுத்து, அவா்கள் சரக்கல்விளை பகுதியில் வசித்து வந்தனராம். ஷைபின் அடிக்கடி மது அருந்தி வீட்டுக்கு வந்தாராம்.
இதனை மனைவி அலினா கண்டித்துள்ளாா். இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவில் ஷைபின் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருங்கல்: புதுக்கடை அருகே நித்திரவிளை பகுதியை சோ்ந்த ரத்தினமுத்து மகன் அஜெஷ் (29). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், முன்சிறை பண்டாலிபரம்பு பகுதியில் தாய்மாமன் ராஜன் வீட்டில் தங்கியிருந்தாராம். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜெஷ், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த புதுக்கடை போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

