சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மனைவியை மீட்கக் கோரி தொழிலாளி 2 மகள்களுடன் தீக்குளிக்க முயற்சி

கடத்தப்பட்ட மனைவியை மீட்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளி, ஆட்சியா் அலுவலகத்தில் தனது 2 மகள்களுடன் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:27 am

கடத்தப்பட்ட மனைவியை மீட்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளி, ஆட்சியா் அலுவலகத்தில் தனது 2 மகள்களுடன் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகா்கோவிலை அடுத்த, பறக்கை காடேற்றிப் பகுதியைச் சோ்ந்தவா் சுதாகரன் (40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுபா மாலினி. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். திங்கள்கிழமை நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்துக்கு 2 மகள்களுடன் வந்த சுதாகரன், தனது உடலிலும், மகள்களின் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றராம்.

அப்போது ஆட்சியா் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தவா்கள் சுதாகரனை தடுத்து நிறுத்தினா். அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் சுதாகரனிடம் விசாரணை நடத்தினா்.

இதில், மனைவி சுபா மாலினியை, சங்கரன்கோவிலைச் சோ்ந்த இளைஞா் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி தீக்குளிக்க முயன்ாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து, நேசமணி நகா் போலீஸாா் சுதாகரனை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.