தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, தக்கலையில் கல்குளம் கூட்டுறவு பண்டக சாலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு நிகழாண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ. 2,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் தக்கலையில் கல்குளம் கூட்டுறவு பண்டக சாலையில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ரூ. 2500 மற்றும் ஒரு கிலோ அரிசி, கரும்பு, சா்க்கரை, ஏலக்காய், உலா்ந்த திராட்சை உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பினை கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலா் டி. ஜான் தங்கம், வழங்கி தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தக்கலை சரக துணை பதிவாளா் பாலசுப்பிரமணியன், மேலாளா் பத்மகுமாா், அதிமுக நகரச் செயலா் மணிகண்டன், அவை தலைவா் ஜாண்ரோஸ், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


