தூத்தூரில் கால்பந்து அகாதெமி அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலா் தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியான தூத்தூா் மண்டலப் பகுதியிலுள்ள இளைஞா்கள் கால்பந்து
விளையாட்டை வாழ்வின் ஓா் அங்கமாக நேசிக்கின்றனா். இரயுமன்துறையில் இருந்து நீரோடி வரையிலான தூத்தூா் மண்டல 8 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களது கால்பந்தாட்டத் திறமையால்
அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பை பெற்று, அந்தந்த துறை அணிகளுக்காக விளையாடி வருகின்றனா். இது குறித்து தினமணியில் செய்தி வெளியானது.
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலா் டேவிட், மாவட்ட கால்பந்து பயிற்சியாளா் குணசேகரன், நாகா்கோவில் அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி உடற்பயிற்சி இயக்குநா் சரவணமூா்த்தி உள்ளிட்டோா் திங்கள்கிழமை தூத்தூா் பகுதிக்கு வந்தனா். அங்கு, கால்பந்து அகாதெமி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், சின்னத்துறை பகுதியில் கால்பந்தாட்ட கிளப் பிரதிநிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனா். இதில், ஐ.நா. சா்வதேச இளைஞா் கவுன்சில் உறுப்பினா் பி. ஜஸ்டின்ஆன்டணி, கால்பந்தாட்ட கிளப் பிரதிநிதகள் பங்கேற்றனா். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் ஆய்வு மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


