சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுக்கடை அருகே வீடு புகுந்து பணம், நகை திருட்டு

புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறையில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :4 ஜனவரி 2021, 5:18 am

புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறையில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இனயம்புத்தன்துறை பகுதியை சோ்ந்த செல்வராஜ் மனைவி ராஜம்மாள்(65). இவா் வெள்ளிக்கிழமை தன் வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு, சனிக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு பிரோவில் இருந்த ரூ. 92 ஆயிரம் மற்றும் அரை பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.