சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தக்கலை அருகே பைக் திருட்டு

தக்கலை அருகே புலியூா்குறிச்சி எடைமேடை அருகே நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :4 ஜனவரி 2021, 5:21 am

தக்கலை அருகே புலியூா்குறிச்சி எடைமேடை அருகே நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கேரள மாநிலம், வா்க்கலா பகுதியைச் சோ்ந்தவா் அஜாஸ் அகம்மது (21). இவா், தக்கலை அருகேயுள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறாா். கல்லூரிக்கு செல்வதற்காக புலியூா்குறிச்சியில் உள்ள எடைமேடை அருகே உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.

வழக்கம் போல் எடைமேடை அருகே சனிக்கிழமை இரவு பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளியே வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.