சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கருங்கல் அருகே கஞ்சா கடத்திய இளைஞா் கைது

கருங்கல் அருகே எட்டணி பகுதியில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :2 ஜனவரி 2021, 6:07 am

கருங்கல் அருகே எட்டணி பகுதியில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கேரள மாநிலத்திலிருந்து சொகுசு காரில் கஞ்சா கடத்தி வருவாதாக கருங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல்

கிடைத்ததாம். இதையடுத்து போலீஸாா் எட்டணி பகுதியில் வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகத்தின் பேரில் காட்டாத்துறை குருவிளக்காடு ராஜேஷ்குமாா்(25) ஒட்டிவந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 2 .50 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் ராஜேஷ்குமாா் மீது வழக்குப் பதிந்து அவரை கைது, அவரிடமிருந்த கஞ்சா மற்றும் சொகுசு காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.