சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுவாமிஜியின் சிகாகோ மாநாட்டு உரையில் இருந்து...

வரலாற்று ஏட்டின் பக்கங்கள் ஆகிவிட்ட சுவாமியின் சிகாகோ சொற்பொழிவின் சில பகுதிகள்....

Updated On :2 ஆகஸ்ட் 2013, 10:52 pm

வரலாற்று ஏட்டின் பக்கங்கள் ஆகிவிட்ட சுவாமியிஜின் சிகாகோ சொற்பொழிவின் சில பகுதிகள்....

இன்பமும் இதமும் களிந்த உங்கள் வரவேற்புக்குப் பதிலளிக்க இப்போது உங்கள் முன் நிற்கிறேன். ஏன் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின் தாய் மதத்தின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்' என்று தமது உரையை ஆரம்பித்தார் சுவாமிஜி.

'பிற மதக் கொள்ளைகளை வெறுக்காமல் மதித்தல் அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன்' என்று இந்து மதத்தின் பெருமையை எடுத்துக் கூறினார்.

'உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப் பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவிக் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். பெருமைமிக்க ஜொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்' என்று இந்தியாவின் பெருமையை எடுத்துக் கூறினார்.

பிரிவினை வாதம், மதவெளி போன்றவற்றைக் கண்டித்து அவை இல்லாத ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன், 'அவற்றிற்கு அழிவுக் காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்' என்று தமது உரையை நிறைவு செய்தார்.