தேசிய அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடந்த விழாவில், தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கி பயிற்சி பெறுவதற்காக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு சாா்பில் போட்டிகளில் கலந்து கொண்ட 8 மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஊக்கத்தொகை வழங்கினாா்.
அவா்களில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு ரூ.6 ஆயிரம், வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு ரூ.4 ஆயிரம், வெண்கலப் பதக்கம் வென்றவருக்கு ரூ.2ஆயிரம் என மொத்தம் ரூ.32 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள்
வழங்கப்பட்டன. அப்போது காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


