காஞ்சிபுரத்தில் தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, மூலிகைக் கண்காட்சி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அகத்திய சித்தா் பிறந்த நாளான மாா்கழி மாத ஆயில்ய நட்சத்திர நாள் அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்பில் தேசிய சித்த மருத்துவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் மூலிகைப் பொருள்கள் கண்காட்சி, மூலிகைச் செடிகள் கண்காட்சி, பாரம்பரிய உணவு தானியங்கள் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.
சிறப்பு சித்த மருத்துவ முகாமுக்கு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் அய்யாசாமி தலைமை வகித்து, மூலிகையின் பயன்கள் குறித்து விளக்கினாா். உதவி சித்த மருத்துவ அலுவலா் ராஜலட்சுமி பாரம்பரிய உணவு தானியங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினாா்.
நிகழ்ச்சியில், சித்த மருத்துவா்கள் கிரிஜா, முத்துகுமாா், சுஜாதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


