உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், அரசாணிமங்கலம், நாஞ்சிபுரம் கிராமத்தில் வசிக்கும் இருளர், பழங்குடி மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா மாற்றம் செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.
அப்போது உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் திடீர் ஆய்வு செய்து விட்டு வெளியில் வந்த அவரிடம் தங்கள் குறைகளை எடுத்து கூறினர்.
அசேபா திட்டபிளான் தொகுப்பு வீடுகள் பண்ணை மேலாளர் நந்தன் கலந்து கொண்டார். விவசாயிகள் சங்க வட்டச் செயலர் வி.கே.பெருமாள் தலைமை தாங்கினார். பொருளர் ஏ.நாகப்பன், மாவட்டத் தலைவர் கே.நேரு, மாவட்டச் செயலர் சி.பாஸ்கரன், துணைச் செயலர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் சென்றதும் காத்திருக்கும் போராட்டம் செய்தவர்கள் கலைந்துச் சென்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

