செங்கல்பட்டு, பாலூர், ஆப்பூர் உள்ளிட்ட குறு வட்டங்களுக்கான 1422-ஆம் பசலிக்கான வருவாய் தீர்ப்பாயம்(ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் டி.ராஜ்குமார் முன்னிலையில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
இதில் வியாழக்கிழமை செங்கல்பட்டு, வெள்ளிக்கிழமை பாலூர் மற்றும் ஆப்பூர், மே 7-ஆம் தேதி காட்டாங்கொளத்தூர், 7, 8-ஆம் தேதி சிங்கபெருமாள்கோயில், 8-ஆம் தேதி கூடுவாஞ்சேரி, 9-ஆம் தேதி வண்டலூர் ஆகிய குறுவட்டங்களுக்கான ஜமாபந்தி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
பட்டா நகல் கோரும் பட்டதாரர்கள் அப்போது மனு கொடுத்து பட்டா பெற்றுக் கொள்ளலாம். பட்டா மாறுதல் மற்றும் பொதுமக்கள் குறைகளான சாலை சீரமைத்தல், தெருவிளக்குகள், குடிநீர், பஸ் வசதி தொடர்பான மனுக்களும் பெறப்படும். வருவாய் தீர்ப்பாயம் நிறைவு நாளன்று விவசாயிகள் கூட்டம் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு வட்டாட்சியர் எஸ்.தாஸ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் செய்துள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

