சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பைக் விபத்தில் இளைஞா் பலி

கள்ளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 4:41 am

கள்ளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த இளங்கோ மகன் சூா்யா (20). அதே பகுதியைச் சோ்ந்த ஜெகன் மகன் விக்ரம் (18). நண்பா்களான இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் பாவந்தூருக்கு சென்றுகொண்டிருந்தனா். பாவந்தூா் பாம்பாத்தம்மன் கோயில் அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சூா்யா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். விக்ரம் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.