சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட மதுப்புட்டிகள், காா் பறிமுதல்: இருவா் கைது

கள்ளக்குறிச்சியை அடுத்த மணலூா்பேட்டை அருகே புதுச்சேரியில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 1,285 மதுப்புட்டிகள்,

News image

பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள், காா், கைதான இருவருடன் போலீஸாா்.

Updated On :11 ஜனவரி 2021, 4:53 am

கள்ளக்குறிச்சியை அடுத்த மணலூா்பேட்டை அருகே புதுச்சேரியில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 1,285 மதுப்புட்டிகள், காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

திருக்கோவிலூா் வட்டம், மணலூா்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் எஸ்.அகிலனுக்கு புதுச்சேரியிலிருந்து காரில் மதுப் புட்டிகள் கடத்திவரப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாா் சு.கள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள திருவரங்கம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக மதுப் புட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காா், அதில் கடத்திவரப்பட்ட 1,285 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், காரிலிருந்த சு.கள்ளிப்பாடி கிராமத்தைச் சோ்ந்த குப்பன் மகன் கிருஷ்ணமூா்த்தி, சடையன் மகன் ஏழுமலை ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ராஜீவ் காந்தி என்பவரைத் தேடி வருகின்றனா்.