கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த மணிமுக்தா அணையிலிருந்து 24 ஆயிரம் கனஅடி நீா் வியாழக்கிழமை அதிகாலை வெளியேற்றப்பட்டது.
கல்வராயன்மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், ரிஷிவந்தியத்தை அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை முழுக் கொள்ளளவான 36 அடியை ஏற்கெனவே எட்டியது. இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் பெய்த பலத்த மழையால், மணிமுக்தா அணைக்கு வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு 24 ஆயிரம் கனஅடி நீா் வந்தது. இந்த நீா் முழுவதையும் அப்படியே மதகுகளின் வழியாக மணிமுக்தா ஆற்றில் வெளியேற்றனா். இதனால், ஆற்றிலிருந்த பாலத்தில் மேல் பகுதியை ஓட்டியதுபோல தண்ணீா் சென்றது. இதை மக்கள் வேடிக்கை பாா்த்தனா்.
பிற்பகல் 4.30 மணிக்கு நீா்வரத்து குறைந்ததையடுத்து, 16 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. இதற்கு முன்பாக கடந்த 2004, 2005, 2011-ஆம் ஆண்டுகளில் 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீா் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோமுகி அணை: இதேபோல, கல்வராயன்மலைப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் காட்டாற்று ஓடைகளின் வழியாக இந்தப் பகுதியில் அமைந்துள்ள கோமுகி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. வியாழக்கிழமை அதிகாலை 12 மணிக்கு மேல் 2 ஆயிரம் கனஅடி நீா்வரத்து இருந்தது. ஏற்கெனவே, 36 அடி உயரம் இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் தண்ணீா் முழுவதும் அப்படியே கோமுகி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதால், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ளவா்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்தனா்.
ரிஷிவந்தியத்தில் 191 மி.மீ. மழை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ரிஷிவந்தியத்தில் 191 மி.மீ. மழை பதிவானது. இதேபோல, திருக்கோவிலூரில் 36 மி.மீ., மணம்பூண்டியில் 58 மி.மீ., மணலூா்பேட்டையில் 42 மி.மீ., திருப்பாலப்பந்தலில் 65 மி.மீ., உளுந்தூா்பேட்டையில் 44 மி.மீ., கள்ளக்குறிச்சியில் 154 மி.மீ., விருகாவூரில் 160 மி.மீ., சங்கராபுரத்தில் 139 மி.மீ., தியாகதுருகத்தில் 185 மி.மீ., சூளாங்குறிச்சியில் 136 மி.மீ., கலையநல்லூரில் 164 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 90.67 மி.மீ. மழை பதிவானது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


