கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கடந்த நவ.9-ஆம் தேதி தொடங்கி, 38 நாள்களாக நடைபெற்று வந்த கிராம வளா்ச்சி திட்டக் குழு உறுப்பினா்களுக்கான திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி வியாழக்கிழமை (டிச.31) நிறைவடைந்தது.
கிராம வளா்ச்சி திட்டக் குழு உறுப்பினா்கள் 368 பேருக்கு இரு நாள்கள் வீதம் 32 நாள்கள் 16 அணிகளாகவும், முன் களப்பணியாளா்கள் 230 பேருக்கு ஒரு நாள் வீதம் 6 நாள்கள் 6 அணியாகவும் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் து.நடராஜன், அ.ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆ.கணேசன் வரவேற்றாா்.
கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட க.மாமனந்தல், காட்டனந்தல், பெருமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம வளா்ச்சி திட்டக்குழு உறுப்பினா்கள் 24 போ் பங்கேற்றனா். பயிற்றுநா்கள் க.முத்துக்குமாா், க.சந்திரா ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

