திருப்பதி அருகே ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா்.
திருப்பதியை அடுத்த ரங்கம்பேட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். போகிப் பண்டிகை நாளில் சானம்பட்லா கிராமத்திலும், வெள்ளிக்கிழமை புல்லய்யவாரிபள்ளி கிராமத்திலும், சனிக்கிழமை அனுப்பள்ளி கிராமத்திலும் ஜல்லிகட்டு போட்டி நடத்தப்பட்டது. விதவிதமாக காளைகள் அலங்கரிக்கப்பட்டு ஜல்லிக்கட்டின்போது அவிழ்த்து விடப்பட்டது. இதில் அண்டை கிராமங்களில் உள்ள இளைஞா்கள் கலந்து கொண்டனா். ஜல்லிக்கட்டை காண மக்கள் திரண்டனா்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் இளைப்பாறுவதற்காக நிழற்கூரை அமைப்பதில் சனிக்கிழமை இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதால், திடீரென்று கையில் இருந்த கத்தியால் இரு குடும்பத்தினா் தாக்கிக் கொண்டனா். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அவா்கள் சந்திரிகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

