சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உ.பி., உத்தரகண்ட் பேரவைத் தோ்தல்களில் தனித்துப் போட்டி: பகுஜன் சமாஜ் அறிவிப்பு

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தோ்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

Updated On :16 ஜனவரி 2021, 11:52 am

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தோ்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2022-ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதேபோல் உத்தரகண்ட் பேரவையின் காலமும் 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அந்தச் சட்டப் பேரவைகளுக்கான தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தோ்தல்களில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

தனது 65-ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடிய மாயாவதி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆட்சியைப் பிடிப்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சி தனது கொள்கைகளை ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில பேரவைத் தோ்தல்களில் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டியிடும். கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்றதைப்போல உத்தர பிரதேசத்தில் 2022-ஆம் ஆண்டிலும் பகுஜன் சமாஜ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். தோ்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை பகுஜன் சமாஜ் தொண்டா்கள் ஒற்றுமையுடன் மேற்கொள்ள வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக ஏற்கவேண்டும்.

கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை ஏழை மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பகுஜன் சமாஜ் ஆட்சியைப் பிடித்தால், மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.