சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சி: முன்களப் பணியாளர்

ஜம்மு-காஷ்மீரில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக தன்னார்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

News image

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சி: முன்களப் பணியாளர்

Updated On :16 ஜனவரி 2021, 6:13 pm

ஜம்மு-காஷ்மீரில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக தன்னார்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரில் கரோனா தடுப்பூசி போடும் பணியை அந்தந்த மையங்களில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மேற்கொண்டனர்.

ஷெரி காஷ்மீர் இன்ஸ்ட்டிடியூட் மெடிக்கல் சயின்ஸ் மையத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பிறகு பேசிய அவர், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்க்கியளிக்கிறது. மற்றவர்களை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் நான் முதல் நபராக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் என்று கூறினார்.