சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லியில் மேலும் 299 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 299 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜனவரி 2021, 11:51 pm

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 299 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 299 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,32,183 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 10,738 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தொற்றில் இருந்து 397 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 6,18,754 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 2,691 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.