கரோனா தொற்று பேரிடர் பணிகளை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியின் வெளிப்படைத் தன்மை குறித்து 100 முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரோனா தொற்று பேரிடரை சமாளிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் பி.எம்.கேர்ஸ் எனப்படும் நிதி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கரோனா தொற்று பரவலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள இந்த நிதிஅமைப்புக்கு நன்கொடை வழங்குமாறு மத்திய அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பி.எம்.கேர்ஸ் மூலம் வசூல் செய்யப்பட்ட தொகையின் பயன்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். பி.எம்.கேர்ஸ் நிதி வெளிப்படைத் தன்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 100 பேர் அடங்கிய குழு பி.எம்.கேர்ஸ் குறித்து பிரதமர் மோடிக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது.
அதில் நன்கொடையாக வசூல் செய்யப்பட்ட நிதி விவரங்கள், அதன் செலவினங்கள், ரசீதுகள் ஆகியவற்றை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும் அக்கடிதத்தில் பி.எம்.கேர்ஸ் நிதி எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது மற்றும் நிர்வகிக்கப்பட்ட விதம் ஆகியவைகள் குறித்த பல கேள்விகளுக்கு மத்திய அரசு முறையாக பதிலளிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த கடிதத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் அனிதா அக்னிஹோத்ரி, எஸ்.பி. அம்ப்ரோஸ், ஷரத் பெஹார், சஜ்ஜாத் ஹாசன், ஹர்ஷ் மந்தர், பி ஜாய் ஓமன், அருணா ராய், மது பதுரி, கே.பி. பி.ஜி.ஜே நம்பூதிரி மற்றும் ஜூலியோ ரிபேரோ உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


